சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டமைப்பு தலைவர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்
அன்பு தோழர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று நமது சங்கத்தின் மாநில கூட்டமைப்பு சார்பாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் எங்களுடைய நியாயமான கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எடுத்துரைக்க வலியுறுத்தி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களை நமது மாநில கூட்டமைப்பு சார்பாக சந்தித்து மனு அளிக்கப்பட்டது மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி .பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அவர்களும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் உசிலை தொகுதி திரு ஐயப்பன் அவர்களும் அ இ அ தி மு க மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி அவர்களும் கம்யூனிஸ்ட் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்.சின்னத்துரை கந்தர்வ கோட்டை மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் திராவிட முன்னேற்றக் கழகம் கிருஷ்ணகிரி ஓசூர் தொகுதி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சி ஜவஹருல்லா பாபநாசம் தொகுதி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து நடைபெறுகின்ற இந்த கூட்டத்தொடரில் நமது கோரிக்கையை நிறைவேற எடுத்துரைக்குமாறு நமது சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.




Comments
Post a Comment