தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் மாநில கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு
*தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் மாநில கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு*
தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மாநில கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் மதுரை செல்வம் தலைமையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களை சந்தித்து தாங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
பின்னர் அது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கினர், அந்த சந்திப்பில் துணைத் தலைவர்: காஞ்சிபுரம் லட்சுமணன், செயலாளர்கள்: திருப்பூர் செல்வராஜ், செங்கல்பட்டு தனுசு, வழிகாட்டு குழு செயலாளர்: கிருஷ்ணகிரி ராஜீ, திண்டுக்கல் கஜேந்திரன், தேன்கனிக்கோட்டை முருகன், காஞ்சிபுரம் விவேகானந்தன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தலைவர் மதுரை செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மாநிலக் கூட்டமைப்பு சார்பில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களை சந்தித்து எங்கள் கோரிக்கையை நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்கிடவும், பணிக்கொடை ஓய்வூதியம் வழங்கிட வலியுறுத்தியும் அமைச்சர் அவர்களை சந்தித்து மனு அளித்துள்ளோம். அதே நேரத்தில் ஊராட்சியில் பணியாற்றுகின்ற துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்களுடைய கோரிக்கை அடங்கிய மனுவை அமைச்சரிடம் அளித்து வந்திருக்கிறோம். எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர் பெருமக்களுக்கும், தமிழக முதல்வர் அவர்களுக்கும் எங்கள் கோரிக்கை மனுவை வழங்கி வந்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.



Comments
Post a Comment